வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் எளிய வழிமுறைகள்

வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் எளிய வழிமுறைகள்

உடல் எடையை குறைக்க நிச்சயமாக நடைப்பயிற்சி மிகவும் உதவும். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நடைப்பயிற்சி ஒரு சாதாரணமான பயிற்சியாக உங்களுக்கு தெரியலாம். ஆனால், உண்மையிலேயே இது மிகவும் சிறந்த உடற்பயிற்சி. அதிகம் சிரமப்பட்டு எடை தூக்கி, சாப்பாட்டை மாற்றி என்றெல்லாம் இல்லாமல் தினமும் மூன்றிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்தாலே போதுமானது.

ஆனால், வெறும் நடைபயிற்சியோடு நிறுத்திக்கொள்ளாமல் அதனுடன் ஏதேனும் ஒரு உணவு முறையை தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால், நிச்சயமாக உங்கள் உடல் கொழுப்பை குறைக்க இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

நீங்கள் தினந்தோறும் 3-4 கிலோமீட்டர் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, உங்கள் உடல் எடை குறையும் அதேவேளையில் உங்கள் உடலில் உள்ள தேவையான சத்தும் கரைந்து போய்விடும். இதை சரியான அளவில் நிரப்ப, சரியான ஒரு உணவு முறை முக்கியம்.

நீங்கள் தெரிந்தெடுக்கும் உணவு உங்களுக்கு ஏற்ற உணவாக இருப்பது அவசியம். நீங்கள், உடல் எடையை குறைப்பதில் சீரியஸாக இருந்தால் சப்ளிமென்ட் என்று சொல்லக்கூடிய சாது உணவு மிகவும் அவசியம்.

தினமும் நடைப்பயிற்சி, அதனோடு உங்கள் வயதிற்கும் உடலுக்கும் சிறந்த சப்ளிமென்ட் என தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவது மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியமும் நிச்சயம் பாதுகாக்க படும்.

உடல் எடை குறைக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஒவ்வொருவரின் பி.எம்.ஐ அளவைப் பொறுத்தும் அவர்களது உடல்நிலையைப் பொருத்தும் உடற்பயிற்சிகள் மாறும். அனைவருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங் செல்ல ஆரம்பிக்கவேண்டும்.

ஆரம்பத்திலேயே அதிக தூரம் நடக்கக் கூடாது. இரண்டாவது வாரம், நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் படிப்படியாக அதிகரித்து, ஆறு மாதத்திற்குள், ஒரு மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி செய்தால் ஆரம்பத்தில் எடை குறையும்.

ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, எடை குறையாது. ஆனால், எடை கட்டுக்குள் இருக்க, நடைப்பயிற்சி செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். டிரெட்மில்லில் நடப்பவர்கள், அந்தக் கருவியில் உள்ள ஒவ்வோர் இலக்கையும் படிப்படியாக முடிக்க முயற்சிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே.

நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும். கார்டியோ பயிற்சிகள் (நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் ) 60 சதவிகிதமும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் (புஷ் அப், ஸ்குவாட், பளு தூக்கும் பயிற்சிகள்) 40 சதவிகிதமும் செய்தால் உடல் எடை குறையும்.

அதிக அளவு உடற்பயிற்சி செய்தால், சீக்கிரமே உடல் எடை குறையும். ஆனால், சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்கும் முறை உடலுக்கு ஏற்றது அல்ல. வாழ்நாள் முழுவதும் அதிக அளவு உடற்பயிற்சி செய்ய முடியாது. எனவே, தினமும் 300 -500 கலோரிகளை எரிக்கும் அளவு உடற்பயிற்சி செய்தால் போதுமானது. வெறும் செருப்பு போட்டுக்கொண்டு நடைப்பயிற்சி செய்யக் கூடாது.

ஷூ அணிந்துதான் நடைப்பயிற்சி, ஜாகிங் செல்ல வேண்டும். எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். எனினும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது உற்சாகம் தரும். உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்பின் என்னும் அமிலம் சுரக்கும். இது மகிழ்வான உணர்வைத் தரும். எனவே, அன்றைய தினம் வேலைகளைச் சுறுசுறுப்பாக செய்ய முடியும். ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொண்டால் போதுமானது.

குடும்பத்தினருடன் ஒன்றாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஊக்கம் அளிக்கும். ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள், ஆர்வக்கோளாறாக எல்லா கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது. முதல் 10 நாட்கள் வெறும் நடைப்பயிற்சி மட்டுமே செய்ய வேண்டும். உடற்பயிற்சியாளர் அனுமதியுடன் மட்டுமே, பளு தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

நடைப்பயிற்சி முடிந்த உடனே காபி, டீ குடிக்கக் கூடாது. 20 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் அருந்தலாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்த பின்னர், நன்றாகக் குளித்த பின்னர், உணவு அருந்தலாம். சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துத்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது, திடீர் தாகம் எடுத்தால் 20-30 மி.லி அளவுக்கு மட்டும் தண்ணீர் குடித்தால் போதுமானது.

உடற்பயிற்சி செய்யும்போது, அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது. இயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை குறைவதோடு, நீண்ட ஆரோக்கியமான வாழ்வும் வசமாகும்.

Leave a Reply