மாசு மரு இல்லாத தெளிவான பொலிவான முகம் பெற..

மாசு மரு இல்லாத தெளிவான பொலிவான முகம் பெற..

நம் அனைவரும் கரும் புள்ளிகள் இல்லாத தெளிவான பொலிவான முக பெறவே ஆசை படுகின்றோம். அவ்வாறு அழகான முக பெற என்ன என்ன நாம் செய்ய வேண்டும்? சரும நிபுணர்கள் சொல்லும் ஆலோசனைகளை பார்க்கலாம்.

அழகு கொஞ்சம் முகம் பெற சரும நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்

இந்த எளிய டிப்ஸ் உங்கள் சருமத்தை சூப்பராக வைத்து கொள்ள நிச்சயம் உதவும். படித்து பயன்பெறுங்கள்.

1. ஆயில் புல்லிங்  (Oil Pulling)

2 ஸ்பூன் நல்ல எண்ணெய் எடுத்து வாயில் ஊற்றி 2 நிமிடம் கொப்பிளிப்பது போன்று வாயில் வைத்து இருங்கள். பின்பு துப்பிவிட்டு பல் துலக்கி கொள்ளலாம். காலை எழுந்தவுடன் தினமும் இதை செய்யுங்கள். இது உடலை சுத்தம் செய்து சரும பிரச்சனைகளை போக்கும்.

[hr style=”dashed”]

2. பேஸ் கிளீனிங்  (Face Cleansing)

முகம் அழகாக செலவே இல்லாமல் ஒரு எளிய அழகு ரகசியம்!

ஆயில் புல்லிங் செய்த உடன் முகத்தை நல்ல பேஸ் வாஷ் போட்டு நன்கு அழுவ வேண்டும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற பேஸ் வாஷ் உபயோகியுங்கள். அப்போது தான் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு, வேர்வை எல்லாம் போய் முகம் சுத்தமாக அழகாக இருக்கும். இதை தினமும் செய்ய வேண்டும்.

[hr style=”dashed”]

3. இறந்த செல்களை நீக்குதல் (Remove Dead Cells)

வாரத்திற்கு இரு முறை இறந்த செல்லகளை நீக்க வேண்டும். நல்ல Face Scrub வாங்கி வைத்து கொள்ளுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துங்கள். இது இறந்த செல்களை நீக்கி, கரும்புள்ளிகளை காணாமல் போக வைக்கும்.

[hr style=”dashed”]

4. பழ பேஸ் பேக் (Fruit Face Pack)

அழகை அள்ளி தரும் ஷவர் ஜெல் குளியல்! 

பழங்களை வைத்து நீங்களே வீட்டில் பேஸ் பேக் போட்டு கொள்ளுங்கள். பழ சாற்றில் உள்ள நிறைய சத்துக்கள் சரும செல்களை புதுப்பிக்கும். சருமத்திற்கு இயற்கையான பொலிவை அல்லி தரும். வாரம் ஒரு பழ பேஸ் பேக் போட்டு முகத்தை மிளிர செய்யுங்கள்.

[hr style=”dashed”]

5. நிறைய நீர் அருந்துங்கள் (Drink More Water)

2-3 லிட்டர் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டும். சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் காலை வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். எப்படி குடித்தால் உடல் சுத்தமாகி மின்னும் சருமத்தை பெறலாம் என்று கூறுகின்றனர் சரும நிபுணர்கள்.

[hr style=”dashed”]

6: நைட் மசாஜ் (Night Cream Therapy)

சருமத்தை என்றும் இளமையாக அழகாக வைக்க தினமும் நைட் மசாஜ் கிரீம் போட வேண்டும். இது சரும செல்களை ரிப்பேர் செய்து சருமத்தை புத்துணர்ச்சி அடைய செய்யும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற நைட் கிரீம் வாங்கி பயன்படுத்துங்கள்.

[hr style=”dashed”]

Leave a Reply